தொடர் மழை விடுப்பை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளிகள் நடக்கும். இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த டிசம்பர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாளை ஈடுசெய்யும் வகையில் இன்று (ஜனவரி 10ம் தேதி) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளும் செயல்பட வேண்டும். அதற்காக வியாழக்கிழமை பாட வேளையை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

Related Stories: