பிறந்த நாளில் தலைப்பு வெளியானது ராம்சரணின் கேம் சேஞ்சர்

ஐதராபாத்: ராம்சரண், ஷங்கர் இணையும் படத்துக்கு தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் நடிகர் ராம்சரணின் பிறந்தநாளான மார்ச் 27ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி இந்த படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  

கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா, ராஜமுந்திரி, பஞ்சாப், நியூசிலாந்து ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ராம்சரண், கியரா நடனமாடும் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Related Stories: