காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போலவே கருப்பு உடையில் வந்த பாஜ பெண் எம்எல்ஏ

சென்னை: சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அவர்கள், அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்தார். அவர், கருப்பு சேலை அணிந்திருந்தார்.

   

அவர், தனது இருக்கையில் அமர்ந்ததும், பக்கத்து இருக்கையின் அருகில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ‘நாங்கள் ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறோம். நீங்களும் அவருக்கு ஆதரவாக வந்தீர்களா’ என்று தங்களுக்குள்ளாகவே பேசி கொண்டனர். இதனால் காங்கிரஸ்- பாஜ எம்எல்ஏக்கள் இடையே சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், ‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் யூனிபார்மில் வந்திருக்கிறார்கள். நீங்களும் கருப்பு சேலையில் வந்துள்ளீர்களே ஏன்? என்றார். அதற்கு வானதி சீனிவாசன், ‘எமர்ஜென்சி காலத்தில் தலைவர்கள் எப்படி சிரமப்பட்டார்கள், அதற்காகத்தான் கருப்பு சேலை அணிந்து வந்திருப்பதாக கூறினார். இவ்வாறு அவர் பதிலளித்ததும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories: