பில்கிஸ் பானு வழக்கு விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதரா நகரில் 2002ம் ஆண்டு நடந்த வன்முறையில் குடும்பத்தினருடன் ஊரை காலி செய்து சென்ற கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை வன்முறை கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது. 3 வயது குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரை தாக்கி, கொடூர முறையில் படுகொலை செய்தது. இந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை தண்டனை காலத்திற்கு முன்பே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி தாமாகவே முன் வந்து விலகியதால் வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை. புதிய அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வக்கீல் ஷோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, ‘புதியதாக சிறப்பு அமர்வு ஒன்று அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: