சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியை காண இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் முன் குவிந்தனர். 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியை காண மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட்டுடன் அதிகாலை முதலே வரிசையில் நின்று காத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது மைதானத்தின் முன் சிலர் பிளாக்கில் டிக்கெட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரின் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 30 டிக்கெட்டுகள் பறிமுதல் செயப்பட்டது.

மேலும் பிளாக்கில் டிக்கெட்களை விற்பனை செய்த நபர்களின் பின்னணி குறித்தும், இதுபோன்று வேறு யாரேனும் டிக்கெட்களை விற்பனை செய்தனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: