17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர் கைது

ரேவாரி: அரியானா மாநிலத்தில் விளையாட்டுத் துறையில் உள்ள வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், தற்போது ரேவாரி மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள மைதானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது சிறுமியை, அவரது பயிற்சியாளர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மைதானத்தில் உள்ள கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவத்தால் கர்ப்பமான அந்தச் சிறுமிக்கு, கடந்த 5ம் தேதி கருக்கலைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடந்த 9ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், நேற்று பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: