மகளிர் பிரிமியர் லீக்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிட்டல்ஸ்!!

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் முதல் அணியாக முன்னேறியுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் ஆடிய மும்பை அணி, டெல்லி அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

சிக்ஸர் மழை பொழிந்த ஆலிஸ் கேப்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புல்லிபட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Stories: