சிங்கம்புணரி, காரியாபட்டி அருகே மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளிய மக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி, காரியாபட்டி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே குட்டையன்பட்டி கிராமம் கீழ்சாந்தி கண்மாயில் தண்ணீர் வற்றியதால், நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் சிங்கம்புணரி, அணைக்கரைப்பட்டி சுக்காம்பட்டி கண்ணமங்கலப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கச்சா, ஊத்தா, பரி, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு மீன்களை லாவகமாக பிடித்தனர். இதில் அதிகளவில் ஜிலேபி, கட்லா, விரால் உள்ளிட்ட மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கம்பிக்குடி பெரிய கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இங்குள்ள வாழவந்த அம்மன் கோயிலில் பொதுமக்கள் ஒன்று கூடி சாமி கும்பிட்டு பூஜை செய்தனர். ெதாடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் மந்திரிஓடை கண்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

 இதில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜாதி, மதம் பாராமல் சமூக நல்லிணக்கத்துடன் பாரம்பரிய முறையில் வலை, பரி, கச்சா, தூரி, கூடை ஆகிய மீன்பிடி உபகரணங்களை ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர். ஒவ்ெவாருவரின் வலையிலும் கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, தேன் கெழுத்தி ஆகிய நாட்டு மீன்கள் சிக்கின.

Related Stories: