காஞ்சிபுரம்: சாலை விபத்தில் வாலாஜாபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (51) உயிரிழந்தார். ஜன.3ல் கோயில் பாதுகாப்பு பணிக்காக நடந்து சென்றபோது திம்மராஜம்பேட்டையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
