பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் கோடை மழை பெய்யும்: மாநில வானிலை ஆய்வு மையம் தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள கோடைமழை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வரும் மூன்று நாட்கள் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பெலகாவி, விஜயநகர், ஹாவேரி, சாம்ராஜ்நகர், தாவணகெரே, ஹாசன், தென்கனரா, வடகனரா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. சூறை காற்று, இடி மின்னலுடன் பெய்துவரும் மழைக்கு பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. மின்னல் தாக்கியதில் சில தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. மாமரங்களில் பூ, காய்கள் உதிர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஹாவேரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பயிர் செய்திருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளது. பெலகாவி மாவட்டம், யமகனமரடி தாலுகாவில் சூறை காற்றுடன் ெபய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விஜயநகர் மாவட்டம், ஹுவினஹடகலி தாலுகாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக ஹீரேஹடகலி ஒன்றியத்தில் பல கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட்டை தாலுகா, பீமனபீடு கிராமத்தில் சூறை காற்று பலமாக வீசியது. மின்னல் விழுந்ததில் தென்னைமரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. தாவணகெரே மாவட்டத்திலும் மழை பெய்தது. ஹொன்னாளி, சென்னகிரி, ஹரிஹர் தாலுகாகளில் சூறை காற்றுடன் பெய்த மழை காரணமாக வாழை உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தில் தத்தளித்து வந்த மக்கள் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தென்கனரா மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பெல்தங்கடி, சார்மாடி, தர்மஸ்தலா, பண்ட்வால், சுப்ரமணிய, சூள்யா, புத்தூர் ஆகிய தாலுகாகளில் மழை பெய்து கொண்டிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இ்ன்னும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் வடகனரா மாவட்டத்திலும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: