தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டில் உள்ள பட்டாசு சேமிப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனானது பட்டாசு தயாரிப்பு ஒருபுறமும், தயாரித்த பட்டாசுகளை சேமித்து வைக்கும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 70 வயதான பழனியம்மாள் மற்றும் 50 வயதான முனியம்மாள் ஆகிய மூதாட்டிகள் இருவரும் பட்டாசு குடோனின் உள்பகுதியிலும், மற்றொருவர் குடோனின் வெளிப்பகுதியிலும் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பட்டாசு குடோனில் திருமணம், கோயில் திருவிழா போன்ற விசேஷங்களுக்கு வானவெடி உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு அருகே உள்ள சேமிப்பு குடோனில் வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: