47 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெ.செல்வநாதன் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநில போக்குவரத்து மேல் முறையீடு தீர்ப்பாயத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி ஏ.டி.மரியா கிளாடி சென்னை தொழில் தீர்ப்பாயத்தின் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்ற 5வது கூடுதல் நீதிபதி கே.எஸ்.ஜெயமங்களம் வேலூர் மாவட்ட தொழிலாளர் தீர்ப்பாய தலைவராகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 18வது கூடுதல் நீதிபதி எஸ்.சுஜாதா காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாகவும், காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி பி.சிவஞானம் தருமபுரி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாய தலைவர் தீப்தி அறிவுநிதி சென்னை வணிகவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் நீதிபதி ஜூலியட் புஷ்பா திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வ சுந்தரி சென்னை குடும்பநல நீதிமன்ற 1வது கூடுதல் நீதிபதியாகவும், சென்னை சிபிஐ நீதிமன்ற 13வது கூடுதல் நீதிபதி எஸ்.எழில் வேலவன் 12வது சிபிஐ நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை சிபிஐ நீதிமன்ற 12வது கூடுதல் நீதிபதி டி.மலர்வாலண்டினா சிபிஐ நீதிமன்ற 8வது கூடுதல் நீதிபதியாகவும், சென்னை சிபிஐ நீதிமன்ற 8வது கூடுதல் நீதிபதி கே.தனசேகரன் சென்னை குடும்பநல நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை குடும்பநல நீதிமன்ற 6வது கூடுதல் நீதிபதி எஸ்.காஞ்சனா சென்னை 4வது குடும்பநல நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 4வது குடும்பநல நீதிமன்ற நீதிபதி வி.தமிழ்மொழி சென்னை குடும்பநல நீதிமன்ற 3வது கூடுதல் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சிவகுமார் வேலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், வேலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.கலைபொன்னி திருவள்ளூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை சிபிஐ நீதிமன்ற 11வது நீதிபதியாக பதவி வகித்து தற்போது கட்டாய விடுப்பில் இருக்கும் எஸ்.ஐய்ஸ்வரனே விழுப்புரம் குடும்பநல நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மீஸ் சென்னை போதை பொருள் வழக்குகளுக்கான நீதிமன்ற முதலாவது கூடுதல் நீதிபதியாகவும், கோவை 2வது மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதியாகவும், கோவை வணிகவியல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி ெசன்னையில் உள்ள தமிழ்நாடு விற்பனை வரி தீர்ப்பாய தலைவராகவும், தமிழ்நாடு விற்பனை வரி தீர்ப்பாய தலைவராக பதவி வகித்துவந்த ஏ.சரவணகுமார் காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற 9வது குடுதல் நீதிபதி ஏ.பிரபாவதி 21வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 22வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.அங்காளீஸ்வரி சென்னை 20வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 21வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் சென்னை 19வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 20வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சி.உமாமகேஸ்வரி சென்னை 18வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 14வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எல்.ராபர்ட் கென்னடி ரமேஷ் சென்னை 22வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

The post 47 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: