காவிரி பிரச்னை தீர்க்கப்படும்: கர்நாடக அமைச்சர் முனியப்பா பேட்டி

மதுரை: காவிரி பிரச்னை தீர்க்கப்படுமென கர்நாடக உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் முனியப்பா கூறுகையில், ‘‘தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியடையும்.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவுடன் பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். மக்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்தப்பிரச்னையும் இல்லை. தமிழ்நாடும், கர்நாடகாவும் சகோதர்களாக உள்ளனர். எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும்’’ என்றார்.

The post காவிரி பிரச்னை தீர்க்கப்படும்: கர்நாடக அமைச்சர் முனியப்பா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: