மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேட்டி

டெல்லி: மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு சசி தரூர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நமது ஜனநாயகத்தின் நிலைமை குறித்து தன் கவலையைத்தான் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக கருத்து கூறினார். ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தின் மீது நடத்தும் தாக்குதல்கள் பற்றிய தன் கவலையை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்றிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி பேசியதைவிட மென்மையாகத்தான் ராகுல் பேசியுள்ளார். வெளிநாடுகளில் காங்கிரஸ் கட்சியையும், முந்தைய ஆட்சியையும் தொடர்ந்து தாக்கி பேசியவர் தான் மோடி என சாடினார். தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தியாவில் முன்னேற்றமே இல்லை என்று பேசியவர் தான் மோடி என்று கடுமையாக புகார் கூறிய சசி தரூர்,  மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி தவறாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, இந்திய அரசியல் நிலைமைகள் குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். இந்தியாவில் ஜனநாயகக் கட்டமைப்புகள் ஒடுக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். நாட்டின் நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் ராகுல் காந்தி முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: