மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்த கூடாது: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகள் சிறந்த மாற்றத்துக்கான மனநிலையுடன் முன்னேற வேண்டும் என்று  ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்டுக் கொண்டார். உத்தரகாண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தின் 124வது பேட்ஜ் ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவர்கள் டெல்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான அவர்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ``பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்போதைய நிலையை தக்க வைத்து கொள்ளும் மனப்போக்கு காணப்படுகிறது.  

சாதாரண சூழலாக இருந்தாலும், பிரச்னைகள் உருவாக கூடிய நிலையாக இருந்தாலும் சரி, மக்கள் பிரச்னையை அலட்சியப்படுத்த கூடாது. ‘தேசம் முதலில், மக்கள் முதலில்’ என்ற சிந்தனை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.  மாற்றத்துக்கான மனநிலையுடன் முன்னேற வேண்டும். நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் உடனடி கொள்கைகளை ஐஏஎஸ் அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: