கடலூர், குமரி கடற்கரையில் 15 படகுகள் தீ வைத்து எரிப்பு

சென்னை:  கடலூர் முதுநகரில் சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி ஆகிய 3 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் விசைப்படகு மற்றும்  பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் முதுநகர் துறைமுகம் பகுதியில் நிறுத்தியிருந்த 8 பைபர்  படகுகள் தீப்பிடித்து எரிந்தது. தகவலநிந்து மீனவர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த கடலூர்  துறைமுகம் போலீசார்  வந்து விசாரணை நடத்தினர். இந்த பைபர் படகுகளுக்கு  தீ வைத்தது யார்? எதற்காக இந்த சதி வேலையில் ஈடுபட்டனர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை  நடத்தினர்.

மேல்மிடாலம்: குமரி மாவட்டம் மேல்மிடாலம் கைதவிளாகம் கடற்கரையில் நேற்று 9 பைபர் படகுகளை மீனவர்கள் நிறுத்தி இருந்தனர். இதில் 2 படகுகள் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது.  வலைகளும் இருந்தன. படகுகள் நிறுத்தி இருந்த இடத்தை சுற்றி புதர்கள் மண்டி கிடந்தது. நேற்று மதியம் அந்த புதரில் தீ பிடித்தது. காற்றின் காரணமாக தீ வேகமாக பரவி கடற்கரையில் நிறுத்தி இருந்த 7 படகுகளில் பரவியது.குளச்சல் தீயணைப்பு  வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 7 படகுகளும் எரிந்து சாம்பலானது. இது குறித்து கருங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: