திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி: புதுகை வாலிபர் மீது வழக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரை சேர்ந்த வாசு மகன் மணிகண்டன். இவர் மலேசியாவில் உள்ள  நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த மலேசியா ஜோர்பாருவை சேர்ந்த வேணுகோபால் மகள் மகேஸ்வரியிடம்(40) நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ரூ.40 லட்சம் பெற்றார். இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் கொ ரோனா பரவல் நேரத்தில் இந்தியா வந்த மணிகண்டன், மீண்டும் மலேசியா செல்லவில்லை.

தினமும் செல்போன் மூலம் மகேஸ்வரியுடன் பேசி வந்த மணிகண்டன், கடந்த சில வாரங்களாக மகேஸ்வரியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த மாதம் இந்தியா வந்த மகேஸ்வரி, மணிகண்டனின் வீட்டிற்கு கடந்த 1ம் தேதி சென்று திருமணம் குறித்தும், தான் கொடுத்த பணத்தை பற்றியும் கேட்டபோது, மணிகண்டனும், அவரது குடும்பத்தாரும் மகேஸ்வரியை மிரட்டினர். இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் மணிகண்டன், அவரது தந்தை வாசு, தாய் ரஜினி, சகோதரி பிரியா மற்றும் சகோதரன் ரஞ்சித்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: