அமமுக பிரமுகரிடம் ரூ.46.70 லட்சம் மோசடி: ஓபிஎஸ் அணி பெண் நிர்வாகி அதிரடி கைது

பெரம்பலூர்: அமமுக பிரமுகரிடம் ரூ.46.70 மோசடி செய்த ஓபிஎஸ் அணி பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி சாந்தி (35). சின்னதுரை தொண்டபாடி கிராம அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக டிடிவி தினகரன் அணி) கிளைச் செயலாளராக உள்ளார். பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (56). இவரது மனைவி சுஜாதா (45). இவர் ஓபிஎஸ் அணியின் மாவட்ட மகளிரணிச் செயலாளராக உள்ளார்.

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் சுஜாதாவிற்கு சொந்தமான வீட்டினை விற்பனை செய்ய முடிவு செய்து கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை மாதம் 17ம் தேதி தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மனைவி சாந்தி என்பவரிடம் வீட்டினை எழுதித் தருவதாகக் கூறி ரூ.66 லட்சம் பேசி, இரு தரப்பும் முடிவு செய்து, சாந்தியிடம் இருந்து சுஜாதா ரூ.46.70 லட்சத்தினை முன் பணமாக பெற்றுக் கொண்டு மோசடி செய்து உள்ளார்.இதுகுறித்து சாந்தி அளித்த புகாரில் சுஜாதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சுஜாதாவை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

The post அமமுக பிரமுகரிடம் ரூ.46.70 லட்சம் மோசடி: ஓபிஎஸ் அணி பெண் நிர்வாகி அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: