கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி 7 கல்லூரி மாணவிகள் பலாத்காரம்: மத்திய பிரதேசத்தில் கொடூரம்

போபால்: கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி 7 கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி உட்பட 3 பேர மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக பிரஜேஷ் குஷ்வாஹா தொடர்பு கொண்டார். அவர் பெண் குரலில் பேசி, மாணவிகளை தொடர்பு கொண்டார். அவரது குரலை அறியாத மாணவிகள், அவரது பேச்சை கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அவ்வாறு செல்லும் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை பிரஜேஷ் குஷ்வாஹா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பிரஜேஷ் குஷ்வாஹா, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக பெண் குரலில் பேசி வசியப்படுத்தினார். இதற்காக பிரத்யேக செல்போன் ஆப்சை பயன்படுத்தி உள்ளார். இவரது வலையில் சிக்கிய மாணவிகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு மாணவிகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுவரை ஏழு பழங்குடியின கல்லூரி மாணவிகள் குஷ்வாஹாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ரோலிங் மில்லில் பணியாற்றிய அவரையும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்துள்ளோம்’ என்றனர்.

The post கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி 7 கல்லூரி மாணவிகள் பலாத்காரம்: மத்திய பிரதேசத்தில் கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: