முட்டவாக்கம் கிராமத்தில் பனையாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள முட்டவாக்கம் கிராமத்தில், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த கிராம தேவதையான ஸ்ரீ பனையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்காக சிதலமடைந்த இக்கோயிலை புதுப்பித்து நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில், கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம், காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றன.  அதன்பின்பு, ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன்பின்  ஸ்ரீ பனையாத்தம்மன் சாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்கான பாலுசெட்டி, முட்டவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.  கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: