புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர், நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை. புராதன சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயல்களையும் அவர்கள் மேற்கொள்ளக் கூடாது. கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து அவை புராதன சின்னங்களுக்கு அபாயகரமானவையல்ல என்பதை இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, இந்திய தொல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: