இலங்கை காற்றாலை திட்ட ஒப்பந்தத்துக்கு அதானி குழுமம் தேர்வானது எப்படி? காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: இலங்கை காற்றாலை திட்ட ஒப்பந்தத்துக்காக எந்த அடிப்படையில் அதானி குழுமத்தை ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்தது என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘‘ அதானி விவகாரம் குறித்து இதுவரை பிரதமருக்கான 78 நேரடி கேள்விகளை அழிக்க முடியாது. எந்த அடிப்படையில் இலங்கையில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்துக்கு அதானி குழுமம்  ஒன்றிய அரசால் தேர்வு செய்யப்பட்டது. வேறு எந்த இந்திய நிறுவனங்களின் முதலீடு குறித்து பரிசீலிக்கப்பட்டதா? அல்லது உங்கள் நெருங்கிய நண்பருக்காக ஒப்பந்தத்தை ஒதுக்கினீர்களா? இந்திய மக்களுக்காக பணி செய்வதை காட்டிலும் உங்களது நண்பர் கவுதம் அதானிக்காக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஒப்பந்தங்களை பெறுவதே உங்களது முக்கிய வேலை என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: