ராஜஸ்தான் பேரவை தேர்தல் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் களத்தில் குதித்தன: கெஜ்ரிவால், ஒவைசி வருகை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் களத்தில் ஆம்ஆத்மி கட்சியும்,  ஏஐஎம்ஐஎம் கட்சியும் தேர்தலில் களம் காண்கின்றன.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கிய எதிர்கட்சியான பாஜக, ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் போட்டி இருந்த நிலையில், தற்போது மேற்கண்ட இருகட்சிகளுக்கு மாற்றாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியும், ஐதராபாத் எம்பி ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் தேர்தலில் களம் காண்கின்றன. அதன் ஒருபகுதியாக நாளையும், நாளை மறுநாளும் ஜோத்பூர், பார்மரில் நடைபெறும் கட்சிப் பிரதிநிதிகள் பங்ேகற்கும் கூட்டத்தில் ஒவைசி கலந்து கொள்கிறார்.

அதேபோல், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரும் 13ம் தேதி ஜெய்ப்பூரில் ஆம்ஆத்மி கட்சியின் ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். பக்கத்து மாநிலமான பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றிய ஆம்ஆத்மி, தற்போது ராஜஸ்தான் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதால் அம்மாநில தேர்தல் கள வியூகங்கள் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: