எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சர்வதேச மகளிர் தினம்

சென்னை: சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், சர்வதேச மகளிர் தினத்தை புதுமையான வழிமுறையில் கொண்டாடியது. பெண்களின் உடல்நலம் மீதான விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தை உள்ளடக்கிய கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஜெய்ஸ்ரீ கஜராஜ், பெண்களுக்கான உடல்நலம் குறித்து ஒரு சிறப்புரையை வழங்கினார். ஓவிய கலையை பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு சிறந்த வழிமுறையாக பயன்படுத்தும் விதத்தில் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு மீது பெண்கள் அக்கறையும், கவனமும் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியைச் சேர்ந்த 32 கவின் கலை மாணவிகளின் ஓவியப் படைப்புகள் மிக நேர்த்தியாக காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

பெண்களின் ஆரோக்கியத்தை செழுமையாக்கவும், பேணவும் அர்ப்பணிப்போடு ஆற்றிவரும் சேவைக்காக மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் துறையின் முதுநிலை நிபுணர் ஆலோசகர்களான டாக்டர் ஜெய்ஸ்ரீ கஜராஜ், டாக்டர் லக்ஷ்மி அஸ்வதாமன் மற்றும் டாக்டர் நிவேதிதா பாரதி ஆகியோரை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் மணியன் பாராட்டி கவுரவித்தார். மகளிர் தின கொண்டாட்டத்தை ஓவியங்களின் மூலம் மேலும் சிறப்பான நிகழ்வாக ஆக்கியதற்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை சேர்ந்த கவின் கலை துறையின் வளரும் இளம் ஓவியர்களையும் அவர் பாராட்டினார்.

Related Stories: