சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் : சித்தூர் கிரீம்ஸ் பேட்டை பகுதியில் சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:எங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. ஆனால் இந்த கழிவுநீர் கால்வாய் மீது மேற்கூரை அமைக்காததால் வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எங்கள் சாலையில் ஆட்டோ அல்லது இருசக்கர வாகனம் வந்தால் ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து எழுந்து அவதிப்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

 இரவு நேரங்களில் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்து வீட்டிற்கு வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும் என புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: