மும்பை: உ.பி. வாரியர்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில், கேப்டன் மெக் லான்னிங் அதிரடி அரை சதத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது. மெக் லான்னிங், ஷபாலி வர்மா இருவரும் கேப்பிடல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 67 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஷபாலி 17 ரன் எடுத்து வெளியேற, லான்னிங் அரை சதம் அடித்து அசத்தினார். மரிஸன்னே காப் 16 ரன், லான்னிங் 70 ரன் (42 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.
