பாகிஸ்தான் அரசு கவிழ்கிறதா?..அமைச்சர் பேச்சால் பரபரப்பு

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் இம்ரான்கட்சி பதவி விலகிய பிறகு எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசை உருவாக்கின. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த கூட்டணி அரசில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் சிந்து மாகாணத்தில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் கூட்டணி அரசில் நீடிப்பது கடினம் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,’ சிந்து மாகாண மக்கள் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர உரிய நிவாரணம் தேவை.  கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது கடினம்’ என்று தெரிவித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது 58 எம்பிக்களை கொண்ட முக்கிய கூட்டணி கட்சியாக பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளது. இந்த கட்சி ஆதரவை விலக்கினால் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: