ஆஸ்டின் தொடரில் அசத்திய மார்தா

அமெரிக்காவில் நடந்த ஆஸ்டின் டெக்சாஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ரஷ்யாவின் வார்வரா கிரச்சேவாவுடன் (22 வயது, 66வது ரேங்க்) மோதிய மார்தா (20 வயது, 40வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

டபுள்யு.டி.ஏ தொடரின் ஒற்றையர் பிரிவில் மார்த்தா சாம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலமாக அவர் 52வது இடத்தில் இருந்து 12 இடங்கள் முன்னேறி 40வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories: