பெரம்பலூர் : சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 77வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வயலப்பாடியை சேர்ந்தவர் மணி (77). இவர், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
