கத்தாரில் அண்மையில் நடந்த உலக கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. 36 ஆண்டுக்கு பின் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதன் நினைவாக அணியின் கேப்டனான நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, வரலாற்று வெற்றியின் ஒரு பகுதியாக இருந்த தனது அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கும் தங்க ஐபோன்களை வழங்கவுள்ளார்.
