ரூ.6,828 கோடியில் 70 பயிற்சி விமானம் வாங்க அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் இந்திய விமானப்படைக்கு ரூ.6,828 கோடியில் எச்டிடி 40 ரகத்தை சேர்ந்த 70 பயிற்சி விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் வழங்கும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதே போல, எல் அண்ட் டி நிறுவனம் மூலம் ரூ.3,108.09 கோடியில் 3 பயிற்சி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: