திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்யும் இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது

*துணை முதல்வரிடம் முறையிட்ட பெண் பக்தர்

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்யும் இடத்தில் துர்நாற்றம் வீசுகிறது என கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த துணை முதல்வரிடம் பெண் பக்தர் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி வந்தார். சுவாமி தரிசனம் முடித்த பிறகு கோயிலுக்கு வெளியே வந்த அவரிடம் பெண் பக்தர் ஒருவர் நீங்கள் அமைச்சர் தானே என கேட்டார். அதற்கு துணை முதல்வர் ஆம் என்றார்.

தொடர்ந்து, என்ன வென்று  கேட்டதற்கு, அந்த பெண் பக்தர் அறைகள் முன்பதிவு செய்யக்கூடிய இடத்தில் சுகாதாரமற்ற நிலையும் துர்நாற்றம் வீசுகிறது. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. அங்குள்ள அதிகாரிகளிடம் கூறினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து செயல் அதிகாரிக்கு டயல் யுவர் இ.ஒ. நிகழ்ச்சி மூலம் புகார் அளிக்கலாம் என்றால் எப்போது போன் செய்தாலும் லைன் கிடைக்கவில்லை. நாங்கள் என்ன செய்வது. நீங்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் பக்தர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து  அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் உறுதி அளித்தார்.

Related Stories: