ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாதை திட்டத்தை எதிர்த்த 23 மனுக்கள் தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. ராணுவத்தில் ஆட்சேர்ப்பு திட்டமான ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாதை திட்டத்தில் தேர்வு செய்யப்படுவோரை முப்படைகளிலும் பணியமர்த்த கூடாது.

மேலும் ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. இம்மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர

சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களில் ஐந்து மனுக்கள் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரியிருந்தன. மீதமுள்ள 18 மனுக்கள் முந்தைய ஆட்சேர்ப்பு திட்டத்தின்படி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தன.

இந்நிலையில் இன்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ‘அக்னி பாதை திட்டத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான வலுவான காரணம் ஏதும் இல்லை. தேச நலனுக்கானுக்காகவும், ராணுவத்தை சிறப்பாக கட்டமைக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு ஆட்சேர்ப்பு கோருவதற்கான தார்மீக இல்லை. ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக்கூறி அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: