ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கூறியுள்ளார். அனுமதி அளிக்கப்பட்ட 107 தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும். வெளி மாவட்டங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் நாளை மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் அலுவலர் சிவகுமார் பேட்டியளித்து வருகிறார்.
