76 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு; காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிமினல்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையேயான தொடர்பு குறித்து தேசிய புலானய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில். பஞ்சாப், அரியானா,டெல்லி,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 76 இடங்களில் என்ஐஏ நேற்று  அதிரடி சோதனை நடத்தியது. இச்சோதனையில்  ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் லக்கி கோக்கர் என்ற டெனிசை என்ஐஏ கைது செய்தது.

கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதி அர்ஷ்தீப் சிங் என்ற தாலாவுக்கும் லக்கி கோக்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. அர்ஷ்தீப்பிடம் அடிக்கடி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசிய கோக்கர் அவரிடம் இருந்து தீவிரவாத செயல்களுக்கு பணம் பெற்றுள்ளார். இதை தவிர கிரிமினல்களான லாரன்ஸ் பிஷ்னோய், ஜக்கு பகவான்புரியா, கோல்டி பிரார்  கோஷ்டியை சேர்ந்த லக்வீர்சிங், ஹர்பிரித்,தலிப் பிஷ்னோய்,சுரிந்தர் என்ற சிக்கு சவுத்ரி, ஹரி ஓம் என்ற டிட்டு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: