பொன்னேரி அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது

பொன்னேரி: அரசு தொடக்கப்பள்ளி மற்றும்  சத்துணவு மையத்தின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடிய சிறுவன் உட்பட இருவரை கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் சத்துணவு மையம் உள்ளது. இங்கு வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை மறுநாள்  பள்ளிக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதில்,  பள்ளி மற்றும் சத்துணவு மையத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டது. இரு கம்ப்யூட்டர், 3 பேட்டரிகள்,  ரெண்டு சீலிங் ஃபேன் மற்றும் சத்துணவு மையத்தில் இருந்த 2 சிலிண்டர்களும் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் உஷாராணி பொன்னேரி போலீசில் புகார் செய்தார்.  

பொன்னேரி போலீஸ் எஸ்.ஐ வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசு பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டு வாசலில்  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தனர். அதில் இந்த பள்ளியிலிருந்து திருடிவிட்டு சென்ற பொருட்கள் மற்றும் மர்ம நபர்கள் பதிவாகி இருந்தது. அப்போது, பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (20), தினேஷ் பாபு (21) மற்றும் 17 வயது மதிக்கதக்க சிறுவன் என மூன்று பேர் திருடியது தெரிய வந்தது.

இதில் ராகேஷ், விஜய் என இருவரும் கைது செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட ராகேஷ் பொன்னேரியில் உள்ள கிளைசிறையில் அடைக்கப்பட்டான். 17 வயது  சிறுவன் என்பதால் சென்னை கெல்லீஸ்சில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். தலைமறைவான தினேஷ் பாபுவை தீவிரமாக தேடுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: