காஷ்மீரில் பனி மலை ஸ்கூட்டரில் ராகுல், பிரியங்கா பயணம்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பனி மலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்காவும் இணைந்து பனி ஸ்கூட்டரில் பயணம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காஷ்மீரில் நிறைவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் தனிப்பட்ட பயணமாக மீண்டும் காஷ்மீர் சென்றார். அங்கு கட்சி ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியும் காஷ்மீர் சென்றார். இருவரும் குல்மார்க் பனி மலையில் ஸ்நோ ஸ்கூட்டர் ஓட்டி மகிழ்ந்தனர். பிரியங்கா ஸ்கூட்டரை ஓட்ட ராகுல் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். பின்னர், ராகுல் காந்தி ஸ்கூட்டர் ஓட்ட பிரியங்கா பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். 101 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: