காஷ்மீரில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் பனி ஸ்கூட்டரில் உற்சாகமாக பயணித்த வீடியோ வைரல்

காஷ்மீர்: காஷ்மீரில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் பனி ஸ்கூட்டரில் உற்சாகமாக பயணித்த வீடியோ அதிகம் பரவி வருகிறது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து காஷ்மீரிலேயே இருக்கும் ராகுல் புல்மார்க் பகுதியில் இருக்கும் சுற்றுலா தளத்திற்கு சென்றார்.

அங்கு அவர் பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீடியோ முன்னர் வெளியாகி இருந்தது. தற்போது ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்காவும் இணைந்து கொண்டார். இருவரும் பனி ஸ்கூட்டரில் பயணித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காஷ்மீரில் தங்கியுள்ள ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். அவர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Related Stories: