வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள்: அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பு

வாரணாசி: நாடு முழுவதும் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். மகாசிவராத்திரியையொட்டி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தர தொடங்கினர். சிவராத்திரியையொட்டி கோவில் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வர் கோவிலில் சிவராத்திரியையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர். சாமி தரிசனம் செய்ய காத்திருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்டனர். கேரள மாநிலம் ஆலுவா மகாதேவர் கோவிலில் சிவராத்திரியையொட்டிபக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்ப்பணம் கொடுத்து அவர்கள் புனித நீராடினர்.

இதேபோல ஆழிமலா பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குவிந்தனர். 58 அடி உயர சிவன் சிலையை தரிசிக்க பக்தர்கள் குவிந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற லிங்கராஜ் கோவில் இங்கு சிவராத்திரியையொட்டி கோவிலின் மத்தியில் உள்ள கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவனின் உருவப்படத்தை பக்தர்கள் பலர் கோலமாக வரைந்திருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Related Stories: