அசாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கடைகள் எரிந்து நாசம்

ஜோர்ஹட்: அசாம் மாநிலம்  ஜோர்ஹட் நகரின் மையப்பகுதியில் உள்ள சவுக் பஜார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு  நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.   யாரும் உயிரிழக்கவில்லை என்று  போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: