உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!: வேலூர் சி.எம்.சி. 49வது இடம், சென்னையில் எம்.எம்.சி. 64வது இடம்..!!

டெல்லி: உலகில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி மற்றும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. CEOWORLD Magazine என்ற இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவக் கல்லூரிகள் முதல் 22 இடங்களை பிடித்துள்ளன. மேரிலன் மாகாணத்தில் உள்ள JOHNS HOPKISN UNIVERSITY முதல் இடத்தை பிடித்துள்ளது. பார்சின் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 
இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி 23 வது இடத்தை பிடித்துள்ளது. புனேவில் உள்ள Armed Forces  மருத்துவ கல்லூரி 34 வது இடத்தை பிடித்துள்ளது. வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 49வது இடத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 64வது இடத்தையும் பிடித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59வது இடத்தை பிடித்துள்ளது. வாரணாசியில் உள்ள வனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி 72வது இடத்தில் உள்ளது.  

The post உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு!: வேலூர் சி.எம்.சி. 49வது இடம், சென்னையில் எம்.எம்.சி. 64வது இடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: