14ம்தேதி மாதேஸ்வரன் மலைக்காட்டில் மான்வேட்டையாட 4 பேர் துப்பாக்கிகளுடன் வந்தனர்: கர்நாடக வனத்துறை

பெங்களூரு: 14ம்தேதி மாதேஸ்வரன் மலைக்காட்டில் மான்வேட்டையாட 4 பேர் துப்பாக்கிகளுடன் வந்தனர் என கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. வனத்துறையினர் அங்கு சென்றபோது வேட்டையாட வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் 3பேர் காயமடைந்தனர்; ஒருவர் இறந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாகவும் கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக மாதேஸ்வரன் மலை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என மாதேஸ்வரன் மலைக்காட்டில் தமிழக மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி கர்நாடக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: