ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது

*பக்த கண்ணப்பர் ஊர்வலம் நடந்தது

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரமோற்சவம் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதில் பக்த கண்ணப்பர் ஊர்வலம் நேற்று நடந்தது.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் முதல் பூஜை பக்த கண்ணப்பருக்கு. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி முதல் நாள் பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். பக்த கண்ணப்பர் கொடைமீது புதிதாக கோயில் அமைத்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் அங்கு 40 அடி உயரத்தில் சிவன் பார்வதிகளின் உருவ சிலைகளையும் ஏற்பாடு செய்தனர். மேலும் பக்த கண்ணப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்திற்கு தங்க உரைகளை ஏற்பாடு செய்தனர். மேலும் பிரமோற்சவத்தையொட்டி கண்ணப்பர் கொடியேற்றம் என்பதால் மலை மீது பக்தர்கள் கவரும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்தனர்.

ஸ்ரீ காளஹஸ்தி என்றால் 3 ஜீவராசிகள் உட்பட முதலாவதாக நினைவிற்கு வருபவர் பக்த கண்ணப்பர். இவர் தன்னுடைய கண்களை சிவபெருமானுக்கு கொடுத்து ( மோட்சம்) முக்தி அடைந்த வேடர் என்பது அனைவரும் அறிந்தது.  சிவ பெருமானின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொறுக்க முடியாமல், சிவனுக்கு தன் இரு கண்களையும் திண்ணன் என்கிற கண்ணப்பன் பக்தியோடு சமர்ப்பித்ததால்  பக்த கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.

பக்தர்களால் பூலோகக் கைலாசம் என்று பெயர் பெற்ற ஸ்ரீ காளஹஸ்தி ேஷத்திரத்தில், சுவாமி (கோயிலில் காளஹஸ்தீஸ்வரர்) கீழே தங்கி, கண்ணப்பருக்கு கைலாச மலையில் இடம் அளித்திருப்பது, பக்தர்கள் கடவுளை விட பெரியவர்கள் என்பதற்கு சான்றாகும்.  மேலும் பிரமோற்சவத்தின் முதல் நாள் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் விழா தொடங்குவது இங்கு வழக்கம்.

இதையொட்டி காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய வழக்கத்தின் படி, பக்த கண்ணப்பருக்கு முதல் பூஜை செய்யப்பட்டது.

13 நாட்கள் நடக்கும் மகா சிவராத்திரி பிரமோற்சவ விழாவின் முதல் நாள் அங்குரார்ப்பணம்(பக்த கண்ணப்பர் கொடியேற்றம்) நடைபெற்றது. முன்னதாக காளஹஸ்தி சிவன் கோயில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து சிவன் பார்வதி உச்சமூர்த்திகளை கண்ணப்ப மலை மீது ஊர்வலமாக கொண்டு செல்ல சென்றனர்.

அங்கு வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்ததோடு கண்ணப்பர் கொடியேற்றம் நடந்தது. தேவர்களை பிரமோற்சவத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் காளஹஸ்தியை சேர்ந்த (வேடர் சமூகத்தினர்) உபதாரர்களாக முன்னின்று பிரமோற்சவத்திற்காக  கைலாசகிரி மலைகளில் வீற்றிருக்கும் தேவர்கள் முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில்  மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடந்தது.

மலையில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில், கோயில் தலைமை அர்ச்சகர்கள் சுவாமிநாதன் முன்னதாக  கலசம் அமைத்து, பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த‌ கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தேவஸ்தானம் வழங்கிய துணியை கொடி மரத்தில் ஏற்றி பிரமோற்சத்திற்கான கொடியை ஏற்றியதோடு அகண்ட மகா தீப ஆரத்தியை எடுத்து நெய்வேத்தியம் சமர்ப்பித்ததோடு பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

பக்தர்கள் ‘ஹர ஹர மஹா தேவா’ ‘ஷம்போ சங்கரா’ என்ற பக்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து பக்த கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் எதிரில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனைகளை கோயில் வேதப் பண்டிதர்கள் செய்தனர்.

 மகாசிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி காளஹஸ்தீஸ்வரலாயத்தில் முதல் பூஜை செய்த பக்த கண்ணப்பர் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து நகர பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சிறப்பு குடைகள், கோலாட்டங்கள், மர பஜனைகள், மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க  நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்த கண்ணப்பருக்கு பட்டு வஸ்திரம்

87-88ம் ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்ததாகவும், அன்று முதல் எங்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய பக்த கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரி பிரமோற்சவ விழாவின் முதல் நாள் கண்ணப்பருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கிவருவதோடு பக்த கண்ணப்பரின் கிருபையால் தாங்கள் பக்தியுடன் சிவபக்தர்களாக மக்களுக்கு ஒரு சில தொண்டுகளையும் சுய உதவிகளை செய்து வருகின்றனர் என்று முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: