முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சென்று தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

சென்னை: முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கும் புகார்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு திடீரென ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு  அலுவலகம் உள்ளது. இங்கு தமிழ்நாடு  முழுவதும் இருந்து பல்வேறு புகார்கள், கோரிக்கைகள் அளிக்க பொதுமக்கள் வருவார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது, அங்கு பெறப்படும் மனுக்கள் குறித்தும், மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதோடு, புகார் அளிக்க வருபவர்களுக்கு எவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதெல்லாம் கேட்டதோடு, புகார்கள் தொடர்பாக எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கைகள்  எடுக்கபடுகிறது என்பதையும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, தலைமை செயலகம் எதிரில் அமைக்கப்பட்டு வரும் புதிய வாகன நிறுத்தும் இடத்தையும் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

Related Stories: