மாதவரம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருவொற்றியூர், டிச.25: மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, ஹவாலா பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் சரவணன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் சரவணனை மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, ஹவாலா பணம் தொடர்பான புகாரின் மீது விசாரணை நடந்து வரும் நிலையில், மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணனை நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: