ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது ஐஎஸ் தாக்குதல்?.. ஐ.நா எச்சரிக்கை

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தலைமையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிலான ஆய்வு கூட்டம் நடந்தது. தொடர்ந்து  ஐ.நா. தீவிரவாதம் தொடர்பான அலுவலக துணைச் செயலாளர் வோலோடிமிர் வொரோன்கோவ் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடந்த திட்டமிட்டுள்ளது.

இந்த தீவிரவாதத் தாக்குதலை ஈராக்கில் உள்ள ஐஎஸ்டுஎஸ் அமைப்பின் மற்றொரு பிரிவான ஐஎஸ்ஐஎல்-கே என்ற தீவிரவாத அமைப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தலிபான்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான உறவை முறிக்கவும், தலிபான்களின் ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த செப்டம்பரில் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்த அமைப்புதான் நடத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: