120வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் மலையாள நடிகையை கவுரவித்த கூகுள்

புதுடெல்லி: மலையாள திரையுலகில் முதல் பெண் கதாநாயகியான பிகே ரோஸி, கடந்த 1903ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இன்று அவரது 120வது பிறந்த நாள் என்பதால், அவரை கவுரவப்படுத்தும் விதமாக இணைய நிறுவனமான கூகுள் தனது முகப்பு பக்கத்தில் ‘டூடுல்’ மூலம் கவுரவித்துள்ளது.

மலையாளத் திரைப்படமான விகதகுமாரன் (தி லாஸ்ட் சைல்ட்) என்ற திரைப்படத்தில், தனது பாத்திரத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான தடைகளை ரோஸி உடைத்தார். அவரது வாழ்நாளில் சிறந்த படைப்புக்காக அவர் கவுரவிக்கப்படவில்லை என்றாலும், ரோஸியின் படங்கள் இன்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: