ஜிஎஸ்டி உதவி ஆணையர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை: ரூ.42 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் காந்திதாமில் பணியாற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் மகேஷ் சவுத்ரி வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.71 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மகேஷ் சவுத்ரியின் அலுவலகம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அவரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.41 லட்சம் ரொக்கப் பணம், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள், பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: