ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா, பெங்கால் முன்னிலை

பெங்களூர்: ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டங்கள்  பெங்களூர், இந்தூரில் நடக்கின்றன.  பெங்களூரில் நடைபெறும் முதல் அரையிறுதியில்  கர்நாடகா 2வது நாளான நேற்று  5 விக்கெட்  இழப்புக்கு 229ரன்னுடன் முதல் இன்னிங்சை தொடர்ந்தது.  களத்தில் இருந்த கேப்டன் மயாங்க் 110, முதல் நாள் வேகத்தை தொடர,. சரத் 66 ரன்னில் ஆட்டமிழந்தார், மற்றவர்கள் வந்த வேகத்தில் வெளியேற, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய மயாங்க் இரட்டைச் சதத்தை கடந்தார். அவரும் 249 ரன் எடுத்திருந்த போது  ரன் அவுட் ஆக முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

அந்த அணி 133.3 ஒவரில் 407 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. சவுராஷ்டிரா அணியின் சகாரியா, குஷாங் தலா 3, சிராக், மன்கட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து 2வது நாள் ஆட்ட நேர முடிவில் சவுராஷ்டிரா  30ஓவரில்  2விக்கெட் இழப்புக்கு  76ரன் எடுத்தது. அதனையடுத்து 331ரன் பின்தங்கிய நிலையில் 3வது நாளான இன்று சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கும்.

மத்திய பிரதேசம்-பெங்கால்: இந்தூரில் நடக்கும் 2வது அரையிறுதியில்  நேற்று காலை  4 விக்கெட் இழப்புக்கு 307ரன்னுடன்  முதல் இன்னிங்சை தொடர்ந்தது. களத்தில் இருந்த கேப்டன் மனோஜ் திவாரி 42ரன்னில் ஆட்டமிழக்க, ஷஹபாஸ் அகமது 14 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு அபிஷேக் பொரேல்(51)  தனது பங்குக்கு அரைசதம் விளாச  ஸ்கோர் உயர்ந்தது. மற்றவர்கள் தடுமாற அடுத்த சில ஒவர்களில் பெங்கால் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 141.3ஓவரில் 438ரன் எடுத்தது.  

மத்திய பிரதேசம் தரப்பில் குமார் கார்த்திகேயா 3 அனுபவ், கவுரவ் ஆகியோர் தலா 2,  சரனஷ் , ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 2வது நாள் ஆட்ட நேர முடிவில்  மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில்  28ஓவருக்கு 2விக்கெட்களை இழந்து 56ரன் எடுத்திருந்தது. அதனால்  382ரன் பின்தங்கிய நிலையில் 3வது நாளான இன்று காலை முதல் இன்னிங்சை மத்திய பிரதேசம் தொடர உள்ளது.

Related Stories: