ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை விதிக்க வேண்டும்: டென்னிஸ் வீராங்கனை எலினா பேட்டி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் ஒரு ஆண்டை நெருங்கியும் தொடர்கிறது. இதனால் உலக அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கவேண்டும் என உக்ரைன் டென்னிஸ் வீராங்கனையும், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான எலினா ஸ்விடோலினா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், , 2024ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.

மேலும் ஒலிம்பிக்கில் அவர்களை (ரஷ்யா மற்றும் பெலாரஸ்) நடுநிலைக் கொடியின் கீழ் வைக்கும் முடிவோடு இருந்தால் தவறான செய்தி உலகிற்கு அனுப்பப்படும். இது மிகவும் வருத்தமாக இருக்கும், என்றார். மீறி அவர்கள் அனுமதிக்கப்பட்டால், நாங்கள் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம். உக்ரைனுக்கு எதுவும் நடக்காதது போல் ஒலிம்பிக்கிற்கு செல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை,என மேலும் அவர் கூறினார்.

Related Stories: